இந்த பாலை ஒரு டம்ளர் குடிச்சா உயிராபத்து உறுதி! ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே பாலும் பால் பொருட்களும் மிகவும் ஆரோக்கியம் நிறைந்து என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்காது.
பால் கல்சியத்தின் சிறந்த மூலமாகும், இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பால் குடிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
மனிதர்கள் பசும் பால், எறுமை பால், ஆட்டு பால், ஒட்டகப்பால் என சில வகை பால்களை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு மிருகத்தின் பாலை ஒரு கிளாஸ் குடித்தால் உங்களின் உயிருக்கே ஆபத்து என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
அது என்ன பால்?
ஆம் பொதுவாக நாம் குடிக்கும் பாலில் சுமார் 3.5 தொடக்கம் 4 சதவீதம் மட்டுமே கொழுப்பு காணப்படும்.
ஆனால் இந்த உயிராபத்தை ஏற்படுத்தும் இந்த பாலில் சுமார் 35 தொடக்கம் 40 சதவீமதம் கொழுப்பு காணப்படுகின்றதாம்.
அந்தளவு கொழுப்பை நமது உடலால் ஜீரணிக்க முடியாது. இதனை மனிதர்கள் பருகினால் கணைய அழற்சியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
கணைய அழற்சி என்பது ஒரு அபாயகரமான நோய் நிலையாக அறியப்படுகின்றது. அது மெதுவாக உடல் உறுப்புகளை செயலிழக்க செய்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
அது எந்த விலங்கின் பால் என கேட்டால் பனிக்கரடியின் பால் தான். இது பனிப்பிரதேசத்தில் வாழ்வதால், அதன் குட்டிகள் குளிரை தாங்கி கதகதப்பாக உணரவே இதன் பாலில் இயற்கையாகவே கொழுப்பு அதிகமாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பால் மனிதர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் என Andrew Derocher என்ற ஒரு பனிக்கரடி ஆராய்ச்சியாளரே இந்த விடயத்தை ஆய்வின் மூலம் கண்டுப்பிடித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |