கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் விஜய்- அசர வைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய் இன்றைய தினம் 51 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருடைய மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் நடிகர் விஜய், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்- பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ந் தேதி 1974-ம் ஆண்டு பிறந்தார்.
இவர், இன்றைய தினம் தன்னுடைய 51ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அப்பாவின் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய விஜய் இன்று மக்கள் விரும்பும் நாயகனாக மாறியுள்ளார். தாயார் ஷோபா திரைக்கதை எழுத, தந்தை சந்திரசேகரின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் விஜய் சினிமாவுக்கு அறிமுகமானார்.
விஜய்யின் ஆரம்ப கால சினிமா வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ்.ஏ.சி தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
முதல் படத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத நிலையில், அவர் எடுத்த சில புத்திசாலித்தனமான முடிவுகளில் ஒன்று தான் விஜய்காந்த் உடன் விஜய்யை இணைத்து அவர் இயக்கிய செந்தூரப்பாண்டி திரைப்படம்.
இப்படி படிபடியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க எப்படியான படங்களை தெரிந்து கொள்ளலாம் என புரிந்து கொண்டு, அதன்படி செயற்பட்டு தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை மற்றும் திருப்பாச்சி ஆகிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருதை இரண்டு தடவைகள் பெற்றிருக்கிறார்.
அன்று முதல் இன்று வரை ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராகவும் வலம் வருகிறார்.
இதன்படி, நடிகர் விஜய்யிடம் ரூ.474 கோடி சொத்துகள் உள்ளன. அதே போன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்குத் ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களிடம் விஜய்யை விட கம்மியான சொத்துக்களே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |