கூந்தல் உதிர்வு முதல் இதய கோளாறுகள் வரை தீர்வு கொடுக்கும் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே முட்டையை எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மிகவும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும் இது திகழ்கின்றது.
புரதத்தின் முக்கிய மூலமாக இருக்கும் முட்டை கூந்தல் உதிர்வு முதல் இதய கோளாறுகள் வரையில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
இவ்வுளவு ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை வைத்து Restaurant பாணியில் குழந்தைகள் முதல் பெரியோர் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அசத்தல் முட்டை குழம்பை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகு தூள் - 1 தே.கரண்டி
முட்டை - 5 (வேக வைத்தது)
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் முட்டைகளை தண்ணீரில் வேக வைத்து, தோல் நீக்கி 2 துண்டுகளாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து, 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்த தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, எண்ணெய் பிரியும் வரையில் நன்றாக கொதிக்கவிட்டு, சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
இறுதியாக வேகவைக்கப்பட்ட முட்டையை சேர்த்த 5 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான முட்டை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |