ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சடி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே ஆந்திரா பாணியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் காரசாரமாகவும் அசத்தல் சுவையிலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் காரத்திற்கு பெயர் போன இடம் என்றால் அது ஆந்திரா மாநிலம் தான்.
ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் காரசாரமான தக்காளி பச்சடியை எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்காளியில் அதிகளவில் வைட்டமின் சி காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
தேவையானப் பொருட்கள்
காய்ந்த மிளகாய் -5
நறுக்கிய தக்காளி -2 கப்
கடலைப்பருப்பு -1 தே.கரண்டி அல்லது 2 ஸ்பூன் -எள்ளு
உளுத்தம் பருப்பு -¾ தே.கரண்டி
சீரகம் -½ தே.கரண்டி
மஞ்சள் -1/2 தே.கரண்டி
எண்ணெய் -1 தே.கரண்டி
பூண்டு- 3 பல் அல்லது 1/4 தே.கரண்டி இஞ்சி பேஸ்ட்
உப்பு- தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
கறிவேப்பிலை -சிறிதளவு
காய்ந்த மிளகாய் -1
சீரகம் - 1 சிட்டிகை
கடுகு - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு -1 சிட்டிகை
பெருங்காயம்- சிறிதளவு
பூண்டு நசுக்கியது-1 பல்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
எள்ளு சேர்த்தால், சிறிது சிறிதாக சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் சீரகம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வறுத்து ,அதனை ஒரு தட்டிற்கு மாற்றி குளிரவிட வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் தக்காளி, பூண்டு, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி முற்றிலும் மென்மையாக மாறும் வரையில் நன்றாக வதக்கி பின்னர் குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அவற்றை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றதக அரைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எப்படிப்பட்ட பதத்தில் பச்சடி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பச்சடியை தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும்,கடுகு சீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து அதனுடன் பச்சடியை சேர்த்தால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் காரசாரமான தக்காளி பச்சடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |