வானில் தென்பட்ட அதிசய காட்சி - நான்கு நிலவுகள் ஒரே நேர்கோட்டில்... வைரல் காணொளி
வானில் நேற்று இரவு ஒரு நேரத்தில் நான்கு நிலவுகள் ஒன்றாக தென்பட்டதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வைரல் காணொளி
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று (பிப்ரவரி 1) இரவு வானத்தில் 4 நிலவுகள் ஒரே நேர்கோட்டில் தோன்றி உள்ளது.
எப்போதுமே வானில் ஒரே நிலவாக நாம் பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தடீரென நான்கு நிலவுகள் தோன்றினால் யாருக்கு தான் அது அதிர்ச்சியாக இருக்காது.
Viral Video: ராட்சத நீளம் கொண்ட பாம்பால் தெறித்து ஓடிய மக்கள்... ஓடி ஓடி சென்று பிடித்து அசத்திய பெண்
மக்கள் எல்லோரும் இது கர்ப்பனையா என ஆச்சரியப்பட்டுள்ளனர். நான்கு நிலவுகள் தோன்றியது போல் காணப்படும் இந்த பாரசெலீன் என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வு.
சிர்ரஸ் மேகங்களில் உள்ள பனிப் படிகங்கள் வழியாக நிலவொளி ஒளிவிலகலுக்கு உள்ளாகும்போது இந்த போலி நிலவுகள் உருவாகின்றன.
நாசாவின் தகவல்படி, இவை நிலவிலிருந்து சுமார் 22 டிகிரி கோணத்தில் காணப்படும். நிலவு அடிவானத்திற்கு அருகில் இருக்கும்போது இவை தெளிவாக தெரியும் எனப்படுகின்றது.
Four moons appear over Russia’s St. Petersburg
— RT (@RT_com) February 1, 2026
The spectacle, known as a paraselene, was created by moonlight bending through ice crystals in the frosty atmosphere pic.twitter.com/J5C5h4uDx8
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |