பொலிவிழந்த கைகளை பொலிவாக்கணுமா? இந்த 4 பேஸ்பெக் போதும்
கைகள் கருமையாக இருப்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவான பிரச்சினை. இதற்காக அதிக விலைமதிப்புள்ள கிரீம்கள் மற்றும் லோஷன்களை பயன்படுத்தியும் மாற்றம் தெரியவில்லையா? கவலைப்பட தேவையில்லை.
நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி கைகளின் கருமையை குறைத்து, பிரகாசமாக்க முடியும். இதற்கு வீட்டின் சமையலறை பொருட்களே போதும்.
வெயிலால் கருப்பான கைகளை வெள்ளையாக்க
கடலை மாவு – மஞ்சள் பேக் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2-3 சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு பாலை சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். அதை கைகளில் தடவி மசாஜ் செய்து, 10-15 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவி மாய்ஸ்சுரைசர் தடவவும்.
தேன் – எலுமிச்சை பேக் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து கைகளில் தடவவும். மெதுவாக மசாஜ் செய்து, 5-10 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும்.
தயிர் – தக்காளி பேக் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றை சேர்த்து கலக்கவும். அதை கைகளில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து, 5-10 நிமிடங்கள் ஊறவிட்டு கழுவவும். பின்னர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்.
உருளைக்கிழங்கை சாறு - உருளைக்கிழங்கை துருவி, அதிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றை கைகளில் தடவி 5-10 நிமிடங்கள் ஊறவிடவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் பஞ்சுருண்டையை நனைத்து கைகளை மெதுவாக துடைக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதைச் செய்தால், கைகளின் கருமை விரைவில் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
