வெறும் 5 நிமிடத்தில் மதிய உணவு செய்யணுமா? இந்த குங்கும பூ சாதம் செய்ங்க
குங்குமப்பூ சாதம் முதலில் பெர்சியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விவசாயி நந்தகுமார், இந்த சிறப்பான சாதத்தை சிக்கன் ஹண்டியுடன் பரிமாறி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதனால் அவர் ‘செஃப் ஆஃப் தி வீக்’ விருதையும் கைப்பற்றினார். இந்த சாதத்தின் செய்முறை பார்ப்பதற்கு எளிதானது. நாம் வழக்கமாக செய்வது போல தக்காளி சாதம், புதினா சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை போன்ற கலவை சாதங்களில் இதையும் சேர்க்கலாம்.
காலை வேளையில் குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸ், அல்லது அலுவலகத்திற்குச் செல்லும் நபர்களுக்கு மதிய உணவாக சுலபமாக செய்யக்கூடிய ஒரு விருந்து இது.
குங்குமப்பூ விலை அதிகம் என்றாலும், இந்த ரெசிபிக்கு கொஞ்சம் போதுமானது. சுவைக்காக பாஸ்மதி அரிசியில் செய்வது சிறந்தது.
தேவையான பொருட்கள்
- குங்குமப்பூ
- பாஸ்மதி அரிசி
- தண்ணீர்
- பிரிஞ்சி இலை
- பட்டை
- ஏலக்காய்
- கிராம்பு
- சீரகம்
- முந்திரி
- கொத்தமல்லி
செய்முறை
1½ கப் பாஸ்மதி அரிசியை மூன்று முறை கழுவி, 20 நிமிடங்கள் ஊறவிடவும். அரை டம்ளர் குளிர்ந்த நீரில் 3 கிராம் குங்குமப்பூ ஊறவிடவும். குக்கரில் 2 ஸ்பூன் வெண்ணெய் உருகவைத்து, பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் வறுக்கவும்.
முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஊறவைத்த அரிசி வடித்து சேர்க்கவும். உப்பு, குங்குமப்பூ நீர், தேவையான தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து கலந்து, குக்கரை மூடவும். மிதமான சூட்டில் 10-12 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான குங்குமப்பூ சாதம் ரெடி.
இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதுடன் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் சீக்கிரமாக ஏதாவது ரெசிபி செய்ய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
