கணவனுக்கு மதிய உணவு சமைத்துகொடுக்க ரூ1,167 பணம் வாங்கும் மனைவி - என்ன காரணம்?
அமெரிக்காவில் வசிக்கும் ரே என்ற பெண், தனது கணவருக்காக தினமும் சமைக்கும் மதிய உணவுக்கு £10 (சுமார் ₹1,167) கட்டணம் வசூலிப்பதாகக் கூறி டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
கணவனுக்கு சமைக்கும் உணவிற்கு பணம் வாங்கும் மனைவி
அமெரிக்காவில் வசிக்கும் ரே என்ற பெண், தனது கணவருக்காக தினமும் சமைக்கும் மதிய உணவுக்கு £10 (சுமார் ₹1,167) கட்டணம் வசூலிப்பதாகக் கூறி டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயும் டிக்டாக் க்ரியேட்டருமான ரே, “என் கணவர் மெக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளில் தினமும் இதே அளவு பணம் செலவிட முடிந்தால், வீட்டில் நான் சமைக்கும் உணவுக்குக் கூட அதே பணம் கொடுக்கலாம்.
இது எனது உழைப்புக்கு மதிப்பளிப்பதாகும்” என்று கூறினார். அவர் மேலும், “உணவுக்காக நிறைய நேரமும் படைப்பாற்றலும் செலவிடுகிறேன். அதற்கு சம்பளம் கிடைப்பது நியாயம்” என்றும் தெரிவித்தார்.
இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
சிலர், “மனைவியின் உழைப்புக்கு மதிப்பு கொடுப்பது தவறல்ல” என ஆதரித்துள்ளனர். மற்றொருபக்கம், “வீட்டு வேலைகள் வணிக ஒப்பந்தமாக மாறுவது சரியல்ல” என்று விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் பெண்களின் ஊதியமற்ற உழைப்பு குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
