தமிழா தமிழா: மறுமணம் செய்வதில் என்ன தவறு? வெளுத்து வாங்கிய வனிதா விஜயகுமார்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மறுமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்துக்கொள்ள தயங்குபவர்கள் என இரு தரப்பினருக்கும் மத்தியிலாக கருத்துக்கள் குறித்து விவாதம் இடம்பெற்றது.
அதில் பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தமிழா தமிழா
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
அதே பாணியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் கடந்த வாரம் மறுமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்துக்கொள்ள தயங்குபவர்கள் என இரு தரப்பினருக்கும் மத்தியிலாக கருத்துக்கள் குறித்து விவாதம் இடம்பெற்றது.
இதன் போது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வனிதா விஜயகுமாரின் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |