தமிழா தமிழா: கன்னித் தன்மை பற்றி அவதூறாக பேசிய இளைஞன்! வெளியேற்றிய தொகுப்பாளர்
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த தலைமுறை காதலில் யாரு Best Boys Vs Girls என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் கன்னித் தன்மை பற்றி அவதூறாக பேசிய கருத்துக்கு தொகுப்பாளர் ஆவுடையப்பன் கடுமையாக சாடிய காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அறியப்படுகின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை ஒத்த பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த தலைமுறை காதலில் யாரு Best Boys Vs Girls என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்ற போது, நபரொருவர் ஆண்கள் அனைவரும் வாய்ப்புக்கான காத்திருப்பவர்கள் என குறிப்பிட்துடன், அவதூறாக பேசியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |