ஆரம்பமாகிறது சரிகமப Li'l Champs Season 5 : வைராலகும் AI promo காணொளி!
சரிகமப Li'l Champs Season 5 விரைவில் ஆரம்பமாகவுள்ளது என செம கியூட்டான முறையில் அறிவித்து ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள AI promo காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் நேற்று முன்தினம்( 23) வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
இறுதிச் சுற்றில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

சீனியர் சீசன் 5 இன் முடிவுக்கு பின்னர், சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஜீ தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |