தமிழா தமிழா: இத வச்சி தான் வேலையா? அப்போ எதுக்கு படிக்கணும் கொந்தளித்த தொகுப்பாளர்!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் விதவிதமாக எதிர்காலத்தை கணிப்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைபில் விவாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவாதத்தின் போது நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுப்பது இப்படி தான் என ஒரு ஜோதிட நிபுணர் கூறிய முறைக்கு எதிராக இணையத்தில் கடுமையாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

தமிழா தமிழா
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அதே பாணியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
மக்களின் மனங்கவர்ந்த இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

அந்தவைகையில் இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் விதவிதமாக எதிர்காலத்தை கணிப்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைபில் விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதன் போது ஒரு கருவியை கொண்டு ஒருவரிடமுள்ள நேர்மறை ஆற்றல்களை அளவிட முடியும். அதன் அடிப்படையில் தான் நிறுவனத்துக்கு ஆட்சேர்ப்பு இடம் பெறும் என ஜோதிட நிபுணர் ஒருவர் கூறிய கருத்தை கேட்டு, தொகுப்பாளர் ஆவுடையப்பன் கோபமடைந்த காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |