Tamizha Tamizha: ஜாதி குறித்து தெனாவட்டாக பேசிய நபர்! நிகழ்ச்சியின் நடுவே நிறுத்தி பாடம் புகட்டிய தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாற்று ஜாதியில் திருமணம் செய்வதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதி்ர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் மாற்று ஜாதியில் திருமணம் செய்வதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதி்ர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் ஜாதி குறித்து பேசிய நபரை நிகழ்ச்சிக்கு நடுவே அழைத்து தொகுப்பாளர் ஆவுடையப்பன் நல்லதொரு பாடத்தை கற்பித்துள்ளார்.
குறித்த நபரின் நிலையைக் கண்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |