Viral Video: குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது இவ்வளவு எளிதா? ஒரு தாயின் ஏமாற்று வேலையைப் பாருங்க
தாய் ஒருவர் தனது குழந்தையை ஏமாற்றி மிகவும் அழகாக சாப்பாடு ஊட்டும் காட்சி வைரலாகி வருகின்றது.
குழந்தையை இப்படியா ஏமாற்றுவது?
பொதுவாக இன்றைய காலத்தில் குழந்தைகள் சாப்பிடுவது, தூங்குவது என அனைத்திற்கும் அடம்பிடித்து வருகின்றனர். இதற்காக பெற்றோர்கள் மொபைல் போனைக் கையில் கொடுத்து தனது வேலையை முடிக்கின்றனர்.
தனக்கு வேலையை சுலபமாக்குவதற்கு பெற்றோர்கள் செய்யும் இந்த செயலால் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு தாய் தனது கைக்குழந்தைக்கு மிகவும் வித்தியாசமான முறையில் உணவு ஊட்டியுள்ளார்.
குழந்தையின் சாப்பாடு பவுலில் சாக்லேட் ஒன்றினை நூலில் கட்டி போட்டுள்ளார். சாப்பாடு எடுக்கும் போது சாக்லேட் சேர்ந்து ஸ்பூனில் வருகின்றது.
குழந்தை சாக்லேட் கிடைக்கப்போவதாக நினைத்து வாயைத் திறந்தால், சாக்லேட் தானாக கீழே விழுந்து சாதம் மட்டுமே வாயிற்குள் செல்கின்றது.
இக்காட்சி குழந்தையினை சாப்பிட வைக்க எளிய வழிமுறையாக இருந்தாலும், அந்த பிஞ்சு குழந்தையை இப்படியா ஏமாற்றுவது என்ற கேள்வி காணொளியினை அவதானிக்கும் போது எழுகின்றது.
Scam Of The Year 😂😂 pic.twitter.com/HIh6nGYSWK
— Baba X Wale (@Babaxwale) August 21, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |