தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் : இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
நவகிரங்களின் நிலை மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில், தமிழ்புத்தாண்டு தினத்தில், சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் அரிய குபேர யோகம் உருவாகப்போகின்றது.

இவ்விரு நட்பு கிரகங்களும் இணைவதால், எந்த ராசிக்கு இந்த யோகம் உள்ளதோ, அந்நபர் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசியை பெறுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
அப்படி குபேர யோகத்தால், பொருளாதார ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த குபேர யோகம் உருவாவதால், இவர்களின் வாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கப்போகின்றது.
பணத்தின் கடவுளான மகா லட்சுமியின் ஆசியால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது. இவர்களின் புதிய முயச்சிகள் எளிதில் வெற்றியடையும்.
சூரிய பகவானின் ஆசியால் உயர்பதவியில் அமர்வதற்கான யோகம் கூடிவரும்.செவ்வாயின் அருளால் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளதால், சிம்ம ராசியினரின் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழப்போகின்றது.
தொழில் ரீதியாக சாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். இதுவரையில் இருந்த கடன் தொல்லைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். உறவினர்களிடையே நீ்ண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் குபேர யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் நிதி நிலையில் எதிர்பாராத அளவுக்கு ஏற்றம் உருவாகப்போகின்றது.
பணியிடத்தில் சக ஊழியர்களால் இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும்.
பல வழிகளில் இருந்தும் பணவரவு கிடைப்பதற்காக யோகம் காணப்படுகின்றது. லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் பொன், பொருள் குவியப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |