தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால் என்ன நடக்கும்?
இன்றைய நவீன உலகில் ஒயின் குடிப்பது சாதாரண விடயமாக மாறிவிட்டது, அதுவும் ரெட் ஒயினை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
காரணம் இளமையாக இருக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது தான்.
ரெட் ஒயின் பரிந்துரைக்கப்படுவது ஏன்?
பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ரெட் ஒயினில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் என்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.
ஒரு பாட்டில் ரெட் ஒயினில் 12-15 சதவீதம் ஆல்கஹால், 125 கலோரிகள், 0 கொலஸ்ட்ரால் மற்றும் 3.8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
பயன்கள்
ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
மிக முக்கியமாக தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் அமெரிக்காவின் சர்க்கரை நோய்க்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை குடித்தபின்னர் சுமார் 24 மணிநேரத்தில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதிலுள்ள ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது.
மேலும் இதிலுள்ள பாலிஃபீனால் என்ற வேதிப்பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது.
இதன்மூலமாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ரெட் ஒயின் உதவுகிறது.
Dementia மற்றும் Alzheimer's போன்ற நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது, விர்ஜினியா பல்கலைகழகத்தின் கூற்றுப்படி, புற்றுநோய் செல்களை விரைந்து அழிப்பதால் மார்பக புற்றுநோய் உட்பட பலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
தினமும் குடிக்கலாமா?
ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.
பக்கவிளைவுகள் உண்டா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றுக்கு ஏற்றபடி, அளவோடு ரெட் ஒயினை குடித்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம், அதாவது ஒருநாளைக்கு ஒரு 5 அவுன்ஸ் என்ற அளவில் பெண்களும், இரண்டு 5 அவுன்ஸ் என்ற அளவில் ஆண்கள் குடிக்கலாம்.