வினுஷா பற்றி ஏன் பேசுனீங்க? உப்புமாவையே சாப்பிட்டுட்டு இருக்கலாம்ல! கமல் காரசாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கடும் கொந்தளிப்பில் மூழ்கியதுடன், அர்ச்சனாவையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்ஷன் அர்ச்சனா இடையே பயங்கரமாக சண்டை வெடித்தது. இதில் நிக்ஷன் கோபத்தில் தவறாக பேசியுள்ளார்.
இதனால் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கடும் கோபத்தில் போட்டியாளர்களை பேசியுள்ளார். அர்ச்சனாவையும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுவரை வினுஷாவை பற்றி பேச்சு எடுக்காத கமல்ஹாசன் இன்று அந்த பிரச்சினையை குறித்து பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |