Bigg Boss: பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்... வெளியேறுவது யார் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்றுள்ளது.
இந்த டாஸ்கிற்கு வெளியே இருந்து பிக்பாஸ் பழைய போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் வந்திருந்தனர்.

முதல் நாளில் மிகவும் அருமையாக சென்ற இந்த டாஸ்கில், சாண்ட்ராவிற்கு சீக்ரெட் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளதால், விளையாட்டு தலைகீழாக மாறியது.
திவ்யாவின் பதவி பறிப்பு, விக்கல்ஸின் பதவி விலகல் என அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த வாரத்தில் சிறப்பாக விளையாடியதாக பார்வதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நன்றாக விளையாடதவர்கள் என எப்ஃஜே மற்றும் சாண்ட்ரா இருவரும் தெரிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா முதலில் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்பு துஷார் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது எப்ஃஜே வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் கடந்த வாரமே விஜய் சேதுபதி இரண்டு பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆதலால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளதாக கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |