Bigg Boss 9: பாருவிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்... ஒரே வாரத்தில் இப்படியொரு மாற்றமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் நன்றாக விளையாடிய நபரை பிக் பாஸ் தெரிவு செய்யக் கோரியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களை சேர்த்து மொத்தம் 19 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்ற நிலையில், பழைய போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் விருந்தினராக உள்ளே வந்தனர்.

இந்த டாஸ்க் மூலமாக போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். மாஸ் காட்டிய திவ்யாவின் பதவி பறிக்கப்பட்டது.
எப்பொழுதும் மிக அருமையாகவும், அனைவரையும் சிரிக்க வைத்து விளையாடும் விக்கல்ஸ் நேற்று கதறியழுது தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரம் சிறப்பாக விளையாடிய நபராக விஜே பாரு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் பாரு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றொரு புறம் தான் கம்ருதினை அவ்வாறு பேசியது தவறு என்று நினைத்து திவாகரிடம் அழுதுள்ளார். தான் மன்னிப்பு கேட்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |