Siragadikka Aasai: முத்துவிடம் கொத்தாக மாட்டப் போகும் ரோகினி! பரபரப்பான கதைக்களம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி தனது முதல் கணவருடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், இந்த விடயம் முத்துவிற்கு தெரியவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இதன் கதைக்களம் அனைவருக்கும் பிடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளது.
நடுத்தர குடும்பத்திலிருந்து மாமியார் வீட்டிற்கு வந்த பெண் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் இவற்றினை கதையாக சென்று கொண்டிருக்கின்றது.

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக மனோஜை திருமணம் செய்து ரோகினி மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், இவருக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் மற்றும் இரண்டு பேர் வந்துள்ளனர்.
அதாவது இவர்கள் ரோகினி திருமணம் செய்த முதல் கணவரின் தம்பி மற்றும் அவரது மனைவி ஆவார். இவர்கள் எதிர்பாராத விதமாக முத்துவின் காரில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்
முத்துவிடம் ரோகினி குறித்த புகைப்படத்தினை காட்டி உண்மையினை வெளியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |