Bigg Boss 9: பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கைகலப்பு... கைமீறி சென்ற சம்பவம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திவாகர் சக்தி இருவருக்கும் பிரச்சனை எழுந்த நிலையில், இதற்கிடையில் எஃஜே திவாகரை தள்ளிவிட்டு கோபத்தை காட்டியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக பிரவீன் இருந்து வருகின்றார். பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளது.
அதாவது போட்டியாளர்களின் உடை, உணவு என அனைத்திற்கும் விளையாடி வெற்றி பெற்றால் தான் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சீருடையில் காணப்படுகின்றனர். நேற்று வைக்கப்பட்ட டாஸ்கில் பிக் பாஸ் லக்ஜுரி வீடு வெற்றி பெற்று புள்ளிகளை வென்றனர்.
ஆனால் இதில் பெரும்பாலான பொருட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது போன்று மாறியது. தற்போதும் பிக் பாஸில் சண்டை நிலவி வருகின்றது.
இதுவரை பொறுமையாக இருந்த சக்தி தற்போது திவாகருடன் சண்டையிட்டு வந்த நிலையில், எஃஜே திவாகரை தள்ளிவிட்டு தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |