Junk food பார்த்தவுடன் ஆசை வருதா? அப்போ இந்த ஊட்டசத்து குறைப்பாடாக இருக்கலாம்
பொதுவாக நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்கள் உடலில் குறையும் பொழுது, நாள்ப்பட்ட நோய் நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களின் ஒன்றான புரதச்சத்து குறையும் பொழுது மனிதர்களின் வளர்ச்சி தடைப்படும். அதே சமயம் தசைகளுடன் தொடர்பான நோய்களும் வருகின்றன.
நீண்ட நாட்களாக எந்தவித காரணமும் இல்லாமல் தசைகளில் வலி ஏற்படும் பொழுது அது நிச்சயம் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம்.
அந்த வகையில், ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய்கள் தான் இவை என்பதை இனங்காணச் செய்யும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
புரதச்சத்து குறைபாடு

1. சிலருக்கு காரணமே இல்லாமல் தலைமுடி உதிர்வு, சருமம் வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாம். இது உங்கள் உடம்பில் புரதச்சத்து குறைப்பாட்டை காட்டுகிறது. போதுமான அளவு புரதம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
2. உங்களுக்கு அடிக்கடி தூக்கம், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் உடம்பு சோர்வாகவே இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு புரதச்சத்து குறைப்பாட்டு நோயாக இருக்கலாம். போதுமான சத்துக்கள் கிடைக்காத பொழுது உடல் சோர்வடையும்.
3. சிலருக்கு நகங்கள் நொருங்கியது போன்று காணப்படும். அப்படி யாருக்காவது பார்த்தால் அல்லது உங்களுக்கே அப்படி தோன்றினால் உடனடியாக மருத்துவரை பார்த்து மோதுமான அளவு அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனின் இதனை கண்டுக்காத பொழுது உங்களுடைய நகத்தையே இழக்க வேண்டி வரும்.

4. காயங்கள் ஆறுவதற்கு அதிகமான காலம் எடுத்து கொண்டால் அது புரத குறைப்பாட்டு பிரச்சினையாக இருக்கலாம். புரதச்சத்து குறையும் பொழுது தசையின் வளர்ச்சி குறைவடையும்.
5. உடலில் புரதம் குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உங்களுக்கு அடிக்கடி நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

6. சர்க்கரை மற்றும் Junk food ஆகிய உணவுகளின் மீது அதிகமான ஆசை இருந்தால் அவை புரத குறைப்பாட்டு நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். முடிந்தளவு இது போன்ற உணவுகளை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, தானிய வகை உணவுகளை அதிகளவு எடுத்து கொள்வது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |