மழை பெய்வதற்கு முன் நமக்கு அதிகமாக வியர்ப்பது ஏன்?
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போது, நமக்கு அதிக வியர்வை தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
வெப்பமான சூழ்நிலையில் நமது தோலிலுள்ள வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரக்கின்றன. நமது தோலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உஷ்ணத்தின் பாதிப்பு ஏற்பட்டு தோல் வறட்சியடையாமல் இருப்பதற்காகவும் நமது உடல் செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது.
நமது தோலில் உருவாகும் வியர்வை ஆவியாவது வெளிப்புறத்திலுள்ள காற்றை பொறுத்தே அமைகிறது.
வெயில் காலங்களில் காற்று அதிக வறட்சியுடன் காணப்படுகிறது, அதாவது ஈரப்பதம் குறைவாக காணப்படுகிறது, எனவே நமது உடலில் தோன்றும் வியர்வை சற்று நேரத்தில் ஆவியாகிவிடுகிறது.
ஆனால் மழை பெய்வதற்கு முன்பு காற்றில் ஈரப்பதம் சற்று அதிகமாக காணப்படுகிறது, ஏற்கனவே காற்றில் நீராவித் துளிகள் கலந்திருப்பதே இதற்கு காரணம்.
அவ்வேளையில் நமது தோலிலுள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் கிடைப்பதில்லை, எனவே நாம் அதிக வியர்வையோடு இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.
Pic: Collins Photo Agency