சினிமாவில் சம்பாதித்து சினிமாவிற்கே செலவிடும் ஜோடி: இந்த ஆண்டு மாத்திரம் இவ்வளவு சொத்துகளா?
சினிமாவில் நடித்து காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சூர்யா- ஜோதிகா தம்பதிகளிடம் இப்போது எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறதென தெரியுமா?
சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலுக்கும் பஞ்சம் இல்லை காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமில்லை. அப்போதைய சினிமாவில் இருந்து இப்போது வரைக்கும் நிறைய ஜோடிகள் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகாவிற்கும் ஒரு இடம் இருக்கிறது. இவர்கள் இருவரும் தொடர்ந்து சில படங்களில் ஜோடியா நடித்து காதல் வயப்பட்டார்கள்.
அதன்பின் கடந்த 2006ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள் இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா மீண்டும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு மாத்திரம் 50 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா- ஜோதிகாவிடம் 200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கிறதாம். கடந்த ஆண்டு 180 கோடி இருந்ததாகவும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் 1.3 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் 730Ld, ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடி Q7, ரூ.60 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ், ரூ.1.1 கோடி மதிப்பிலான ஜாகுவார் XJ L போன்ற சொகுசு கார்களும், மும்பையில் பல கோடிக்கு பெறுமதியான வீடும் வைத்திருக்கிறார்கள்.
அதிகமாக சினிமாவில் சம்பாதித்தாலும் அதனை 2டி நிறுவனம் தயாரிப்பில் பல படங்களை தயாரிப்பதற்கு செலவழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |