சூர்யா- ஜோதிகா காதல்... ஒரே பாடலில் சப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்
சூர்யா- ஜோதிகா காதலை அறிந்துக் கொண்டு முன்கூட்டியே திருமணத்திற்காக பாடலை கம்போஸ் செய்து சப்ரைஸ் கிப்ட்டாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சூர்யா- ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்தார். தொடர்ந்தும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யா இன்று தனது 48ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் சப்ரைஸ் கிப்ட்
நடிகர் சூர்யாவிற்கு எப்போது சப்போர்ட்டாக இருப்பவர்தான் நடிகை ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போதே காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை.
ஆனால் இவர்கள் தொடர்ந்து இணைந்து அடுத்தடுத்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த போதுதான் இவர்களின் காதல் இயக்குநர் பாலாவிற்கு தெரிய வந்தது.
பாலா தான் இவர்கள் காதலுக்கு சூர்யாவின் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களின் காதலை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
சூர்யாவும் ஜோதிகாவும் சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற விடயம் தெரியவந்தவுடன் அந்தப் படத்தில் வரும் 'அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அல்வா மாதிரி' என்ற பாடலை இவர்களுக்காக கம்போஸ் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் பாடல் ஒரு திருமண பாடலாக உருவாகியிருந்தது இதனை சூர்யா-ஜோதிகாவின் கல்யாண பரிசாக இருக்கட்டும் என இயக்குனரிடம் கூறியிருக்கிறார் ரஹ்மான். இந்த திரைப்படம் வெளியாகி மூன்றே நாளில் திருமணம் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |