வசீகரிக்கும் தீவு! மகனின் பிறந்தநாளை சூர்யா- ஜோதிகா எங்கு கொண்டாடியுள்ளார்கள்?
தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா- ஜோதிகா, குடும்பம்- திரைத்துறை என இரண்டையுமே அழகாக நேர்த்தியாக திட்டமிட்டு கொண்டு செல்வதில் பலருக்கும் இவர்கள் மீது பொறாமை தான்.
இவர்களது பிள்ளைகள் தியா மற்றும் தேவ், இருவரது படிப்புக்காக மும்பையில் செட்டிலாகிவிட்டார்கள்.
இது பல சர்ச்சைகளை கிளப்பினாலும் தங்களது வாழ்வை சந்தோஷமாக திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமே Faroe Island ஆகும்.
சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள், குட்டி குட்டி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஜோதிகாவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
அந்த வீடியோவில் மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதையும் காணலாம், என்னதான் வேலை இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதிலும் தவறுவதே இல்லை சூர்யா என ஜோதிகாவே பலமுறை பாராட்டி கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |