சூர்யா ஜோதிகா வீட்டில் நடந்த விசேஷம்! வாழ்த்து மழையில் நனையும் ஜோடிகள்
சூர்யா - ஜோதிகா ஜோடி தங்களது 16-வது திருமண நாளை இன்று கொண்டாடி வருவதால் அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா தம்பதிகள்
சூர்யா மற்றும் ஜோதிகா 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.
முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றார். நடிகை ஜோதிகாவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தெரிவு செய்து அவ்வப்போது நடித்து வருகின்றார்.
சூர்யாவின் மகள் நியூயார்க்கில் உயர் கல்வி படித்து வருகின்றார். இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடி இன்று தனது 16வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
வாழ்த்து மழையில் நட்சத்திர ஜோடி
திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. பிரபலங்களும் அதன் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா - ஜோதிகாவின் திருமண நாளை ஒட்டி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் அங்குள்ள முதியோர் இல்லத்தில் அங்கு வசிக்கும் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்கி உள்ளனர்.