லைலாதான் சூர்யாவுக்கு பொருத்தமானவர் என்று கூறிய ஜோதிகா
வெள்ளித்திரையின் நட்சத்திர ஜோடி பட்டியலில் சூர்யா, ஜோதிகாவுக்கு தனியிடமுண்டு. காரணம், நட்சத்திர ஜோடி என்றாலே நிச்சயம் எதாவது கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருக்கும்.
ஆனால், இந்த ஜோடியைப் பற்றி எப்போதும் மகிழ்ச்சியான செய்திகளே உலாவரும்.
அந்த வகையில் அண்மையில் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றியிருந்த வேளை, திரையில் சூர்யாவுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி யார் என்ற கேள்வி ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு ஜோதிகா, “நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியது போன்ற படங்களில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த லைலா மட்டும்தான் அவருக்கு பொருத்தமான ஜோடி.
அதேசமயம் காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கணவராக இருந்தாலும் திரையில் ஒரு நடிகராக அவரை ரசிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.