உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லைலா வெளியிட்ட புகைப்படம்! மல்லிகை பூ கொடுத்தது யார்னு தெரியுமா?
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த லைலா பூ விற்கும் பெண்ணிடம் பூ வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை லைலா
விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய லைலா, பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்த நிலையில் நடிகை லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தபின் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. லைலாவுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் கூடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
மனிதரிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு கெஞ்சிய நாய்! நபர் செய்த காரியம் என்ன தெரியுமா?
லைலாவின் புகைப்படம்
இந்நிலையில், நடிகை லைலா தனக்கு தமிழ்நாட்டு பெண் ஒருவர் மல்லிகைப்பூ கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
தமிழக மக்கள் எப்போதும் அன்பானவர்கள் என்றும் தமிழ் குடும்பங்கள் மிகவும் அன்பு செலுத்துபவர்கள் என்றும் எனக்கு மல்லிகைப்பூ கொடுத்த இந்த பெண்ணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
லைலா மல்லிகைப்பூவுடன் உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.