முகப்பருவை வேரோடு எடுக்கும் தேங்காய் எண்ணெய் வைத்தியம்.. இந்த பொருள் மட்டும் கலந்துக்கோங்க
சிலரின் முகத்தில் தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். அதற்கு என்ன செய்யலாம் என கேட்ட பொழுது பலரும் வாய்க்கு வந்த வைத்தியங்களை கூறியிருப்பார்கள்.
இப்படி கேட்டுக் கேட்டு சலித்து விட்டது என்றால் கடைசியாக சருமத்திலுள்ள பருக்களுக்கு முடிவுக்கட்டும் வைத்தியம் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள், திறந்த துளைகள் மற்றும் வறண்ட சருமப் பிரச்சினை வருகின்றன.
அந்த வகையில் பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேங்காய் எண்ணெய் வைத்தியம் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
முகப்பருவை வேரோடு விரட்ட வீட்டு வைத்தியம்
தேங்காய் எண்ணெய் மற்றும் படிகாரம் இரண்டும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் கொடுத்து ஈரப்பதமாக்கும்.
படிகாரம், கிருமி நாசினியாக செயற்பட்டு, முகத்திலுள்ள அழற்சியை விரட்டும். சருமப் பிரச்சினைகளை நீக்கும் இந்த இரண்டு பொருட்களையும் முகத்திற்கு தடவினால் ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பலன்கள்
1. முகப்பரு பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் படிகாரத்தை முகத்திற்கு பயன்படுத்தலாம். இதிலுள்ள காரணிகள் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. அதே போன்று தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் சருமத்திலுள்ள வீக்கத்தை குறைக்கிறது.
2. உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களுக்கு அடிக்கடி அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். அவர்களுக்கு இவை இரண்டும் உதவிச் செய்கிறது. தேங்காய் எண்ணெய் சருமத்திற்குத் தேவையான நிவாரணம் தருகிறது.
3. முகத்தில் உள்ள திறந்த துளைகளை சரிச் செய்வதற்கும், அவற்றை சரிச் செய்வதற்கும் இந்த இரண்டு பொருட்களும் உதவியாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. அத்துடன் சருமம் பார்ப்பதற்கு பிரகாசமாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |