நடிகர் சூர்யாவின் மகள் தியா வெளிநாட்டில் படிக்கிறாங்களா? வெளியான தகவல்
நடிகர் சூர்யாவின் மகள் உயர் கல்விக்காக நியூயார்க் சென்றுள்ளதாக விருமன் பட இசை வெளியீடு நிகழச்சியில் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
சூர்யா மற்றும் ஜோதிகா 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் சூர்யா, ஜோதிகாவின் மதிப்பெண் இணையத்தில் வெளியாகியது.
முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றார். நடிகை ஜோதிகாவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தெரிவு செய்து அவ்வப்போது நடித்து வருகின்றார்.
சமீபத்தில் மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகாவிற்கு மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் சென்றுள்ளார் சூர்யா.
அங்குள்ள சுற்றுலா தளங்களை ஜோடியாக குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சூர்யா, மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டதோடு, அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகியது. மேலும் சூர்யாவிற்கு தேசிய விருதும் அறிவிக்கப்படுள்ளது.
வெளிநாட்டில் சூர்யாவின் மகள்
இந்நிலையில் சூர்யா விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கொண்ட போது தனது மகள் உயர் கல்விக்காக நியூயார்க்கில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டைமெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படம் தான் விருமன்.
இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதில் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது நான் எனது மகளுடன், அவரின் உயர்கல்விக்காக நியூயார்க்கில் இருந்தேன். ஒரு நாற்பது நாட்கள் நான் நியூயார்க்கில் இருந்தேன்.
சூர்யாவின் பேச்சில் இருந்து அவரது மகள் தியா நியூயார்க்கில் படிக்கவிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.