ஆசை, ஆசையாய் பிரபல நடிகையை காதலித்த கார்த்திக் - மகனுக்கே எதிரியாக மாறிய சிவகுமார்
ஆசை, ஆசையாய் பிரபல நடிகையை காதலித்த கார்த்திக்கிற்கு சிவகுமார் எதிரியாய் மாறிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல நடிகையை காதலித்த கார்த்திக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக் சிவகுமார். இவர் தமிழில் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பு திறமையால் 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், எடிசன், தமிழக அரசு திரைப்பட விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகர் கார்த்திக் பற்றி ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
அது என்னவென்றால், லிங்குசாமி இயக்கத்தில் ‘பையா’ படத்தில் நடிகை தமன்னாவுடன் கார்த்திக் நடித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்குள் காதல் மலர்ந்ததாம்.
எதிரியாக மாறிய சிவகுமார்
ஏற்கெனவே, முதல் மகன் சூர்யா, ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இரண்டாவது மகனுக்கு குடும்பத்தில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். ஆனால், ‘பையா’ படத்தில் தமன்னாவும், கார்த்திக்கும் நெருங்கி பழகி வந்த விஷயம் தெரிந்து சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் பிரித்துவிட்டாராம்.
கார்த்திக் கட்டினால் தமன்னாவைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். உடனே, அவசர, அவசரமாக ஈரோட்டில் உள்ள தன் குடும்பத்திற்கு தெரிந்த பெண்ணை பார்த்து கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைத்தாராம் சிவக்குமார்.
இக்கல்யாணத்தில் விருப்பமே இல்லையென்றாலும், கட்டாயத்தின் பேரில் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார் கார்த்திக். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வியப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |