வேறொருவருடன் தனிமையில் மனைவி... அவதானித்த கணவர்! ஐந்து ஆண்டுகள் கழித்து நிகழ்ந்த கொலை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த மனைவியின் தற்போதைய வாழ்க்கைத் துணையை, கணவர் சரமாரியாகத் தாக்கி கொலை செய்ததோடு, காவல்நிலையத்திலும் சரணடைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சுதாகரனின் மனைவியும் அவர் வீட்டின் அருகில் வசித்து வந்த வேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, தனிமையில் இருந்துள்ளதை கணவர் அவதானித்துள்ளார்.
இதனைக் கண்டித்து சுதாகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வேலுவை காவல் துறையினரும் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து வேலு, சுதாகரனின் மனைவியுடனான தனது தொடர்பைத் துண்டித்த நிலையில், தனது மனைவியுடன் சுதாகரன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்சினை எழவே, ஒரு கட்டத்தில் மனைவியும், வேலுவும் மும்பைக்கு எஸ்கேப் ஆகி தலைமறைவாக வாழத்தொடங்கியுள்ளனர்.
ஐந்தாண்டுகளுக்குப் பின் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த வேலு, அயன் சிங்கம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், வேலு ஊருக்கு வந்தை அறிந்த சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சுதாகரன், அவரது சகோதரர் சுடலை முத்து, இசக்கிமுத்து ஆகிய மூன்று பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.