நயன்தாராவின் வாடகை தாய் எங்கு இருக்கிறார்? வெளியே கசிந்த ரகசிய தகவல்கள்
நயன்தாரா விக்னேஷ் ஜோடியின் இரட்டை குழந்தைகள் விவாகரம் பூதாகரமாகி உள்ள நிலையில், சமீபத்தில் நயன்தாரா சிகிச்சை எடுத்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விக்கி ஜோடி
கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடிகள் சமீபத்தில் தாங்கள் இரட்டை குழந்தைக்கு அப்பா அம்மா ஆகியுள்ளதாக பதிவு ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விக்னேஷ் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டு கூறிய இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பயங்கர பூதாகரமாகி உள்ளது.
வாடகை தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளதாகவும், ஆனால் அரசின் விதிமுறைகளை மீறி இவ்வாறு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுகாதாரத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அதன்படி, இருவரிடமும் கடிதம் வாயிலாகவோ, நேரில் அழைத்தோ விசாரணை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவாரணைக்கு அழைக்கப்படும் ஜோடிகள்?
கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேய் உடல் நலத்தை கண்காணிக்கும் சுகாதாரத் துறையின் பிக்மி எண் நயன்தாரா பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாடகை தாய் பெற நயன்தாரா எப்போது முன் பதிவு செய்தார், தம்பதிக்கு குறைபாடு கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டதா, சிகிச்சைகள் எத்தனை நாட்கள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கங்கள் கோரப்பட உள்ளன.
சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையில் நயன்தாரா உடல் நலக்குறைவால் அண்மையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை வாடகை தாய் சிகிச்சை அளித்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட உள்ளதாகவும், விதிகளை மீறி இருந்தால் இருவரது மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இரண்டு முறையான வாடகை தாய்
வாடகை தாய் முறையில் இரண்டு முறை இருக்கின்றதாம். முதல் முறை Surrogacy in the traditionl sense அதாவது பாரம்பரிய வகை ஆகும். இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு மட்டும் டுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருபூட்டப்படுவதாகும்.
இரண்டாவது முறை gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கருமுட்டையுடன் சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்பு அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் வைத்து வளர்க்கப்படும்.
இந்த இரண்டாவது முறைப்படிதான் நயன்தாராவிற்கு குழந்தை பெற்று கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
நயன்தாராவின் வாடகை தாய் யார்?
இந்நிலையில் நயன்தாராவிற்கு குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகை தாய் யார் என்பதை இருவரும் ரகசியமாக வைத்துள்ள நிலையில், தற்போது சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.
நயன்தாரா விக்கி ஜோடியின் வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில் நயன்தாராவின் அண்ணன் துபாயில் இருப்பதுடன், அங்கு ஏராளமான மலையாளிகள் துபாயில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மூலம் வாடகை தாய் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தற்போது கூறப்படுகின்றது. தமிழக அரசு தற்போது விசாரணையை தொடங்கி இருப்பதால் இந்த தம்பதிகள் விரைவில் உண்மையை உடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.