எனக்கு திருமணம் வேண்டாம் லிவிங் டு கேதர் போதும் : நடிகையிடம் அடம்பிடித்த கமல்!
திருமணம் வேண்டாம் வேண்டுமென்றால் லிவிங்கில் இருக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் பிரபல நடிகையிடம் கேட்ட விடயம் தற்போது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
திருமணம் வேண்டாம்
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக நடித்து வந்தவர்தான் இவர். அக்காலத்தில் பல நடிகைகளுடன் பல கிசு கிசு தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
மேலும் இவர் அந்தக் கால பிளேபாய் ஆகத்தான் வர்ணித்தார். இவ்வாறன சமயத்தில் தான் நடிகை வாணி கணபதி என்பவருடன் காதல் வயப்பட்டார். ஆனால் கமல் ஹாசனுக்கு வாணியை திருமணம் செய்ய விருப்பமில்லையாம்.
அவரைக் காதலித்து அவருடன் லிவிங் டுகெதரில் இருக்கவே ஆசைப்பட்டாராம். அந்த சமயத்தில் பாலசந்தர் இது போன்று இருக்க கூடாது, அப்படி இருந்தால் உன்னுடைய கேரியர் அழிந்துவிடும் என்று கமலிடம் சொல்லி வாணியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.
அதற்குப் பிறகுதான் 1978ஆம் ஆண்டு கமல் வாணி கணபதியைத் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் அவரை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டார்.