சூர்யாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது- கொந்தளித்த பிரபல பத்திரிக்கையாளர்
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
5 தேசிய விருது
2020ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் வென்றது.
மும்பையில் வீடு வாங்கிய சூர்யா
நடிகர் சூர்யா மும்பையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜோதிகா பாலிவுட்டில் கவனம் செலுத்த இருப்பதாகவும், இதனால் சூர்யா குடும்பத்துடன் அங்கேயே இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சூர்யா தன் குடும்பத்துடன் கீழடி சென்று அங்குள்ள அதியங்களை பார்த்து மகிழ்ந்தார்.

கொந்தளித்த பிரபல பத்திரிக்கையாளர்
மும்பையில் வீடு வாங்கிய நடிகர் சூர்யாவிற்கு சமூகவலைத்தளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் அந்தனன் பேட்டி ஒன்றில் பேசுகையில்,
ஏன் சூர்யா மும்பையில் வீடு வாங்கக் கூடாதா? இதில் என்ன பிரச்சினை இருக்கு? படப்பிடிப்பு சமயத்தில் சென்னைக்கு வந்து வந்து செல்வார். ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது.அவரின் நடிப்பு ஓவர் ஆட்டிடியூட்டாக இருக்கும்.
அதனால எனக்கு சுத்தமா சூர்யாவை நடிப்பில் பிடிக்காது, ஆனால் ஒரு மனிதராக எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்லவர். பெரும்பாலான நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை எங்கெங்கேயோ போய் கொட்டுவார்கள். ஆனால் சூர்யா மட்டும் தான் பெரும்பகுதி சம்பளத்தை தான் நடத்தி வரும் அகரம் கட்டளையில் செலவிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாம் அகரம் கட்டளையின் மூலம் கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இப்படி சமூகத்தில் அக்கறை கொண்ட சூர்யாவை இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க வேண்டும். இது தவறு இல்லையா? என்று அந்தனன் கூறியுள்ளார்.