செந்திலை நம்பிய ராஜலட்சுமியின் வாழ்க்கை...! காதலால் வெற்றிக்கண்ட ஜோடிகள்
சிறிய சிறிய கஞ்சேரிகளில் ஆரம்பித்து தற்போது பெரிய திரையில் பின்னணி பாடகர்களாக மாறியிருக்கும் சூப்பர் சிங்கர் ஜோடிகளின் சுவாரஸ்ய நேர்காணல்.
ராஜலட்சுமி செந்தில்
பிரபல தொலைக்காட்சியொன்றில் மேடையேறியவர் தான் ராஜலட்சுமி இந்த நிகழ்ச்சியில் இவர் மட்டும் பங்கு கொள்ளாமல் தனது கணவருடன் ஜோடியாக பங்கேற்றிருந்தார்.
இந்த இரு ஜோடிகளின் குரல் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் மொழி தெரியாதவர்களையும் இவர்களின் பாடலுக்கு ஆடும்படி செய்து விட்டார்கள்.
Image: femina
‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ பாடல் மூலம் திரையில் அறிமுகமாகி தற்போது ஆங்கிலம் மொழி மூலம் பாடல் பாடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.
இவரின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அவ்வாறு தான் இவர்களின் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்கள் அதிகம் ஆனாலும் அவை அனைத்தும் ஒவ்வொரு ரகமாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக பாட ஆரம்பித்து தற்போது பின்னணி பாடகர்கள் ஆகும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.
இவர்களின் நேர்காணல் ஒன்றில் தங்களது ஆரம்பம் பற்றியும், தற்போதைய நிலைமைப் பற்றியும் நிறைய விடயங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.