இந்த ஜோடிகள் திருமணத்தின் போது எப்படி இருந்திருக்காங்க...!
பிரபல தொலைக்காட்சியொன்றில் மேடையேறிய இரு ஜோடிகளின் குரல் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் மொழி தெரியாதவர்களையும் இவர்களின் பாடலுக்கு ஆடும்படி செய்து விட்டார்கள்.
நாட்டுப்புற பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தான் இந்த ஜோடிகள்.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அவ்வாறு தான் இவர்களின் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்கள் அதிகம் ஆனாலும் அவை அனைத்தும் ஒவ்வொரு ரகமாக அமைந்திருக்கும்.
செந்தில்-ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவருமே நாட்டுப்புற பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமாகினார்கள்.
பிறகு, கணவன்,மனைவி என இருவரும் சூப்பர் சிங்கரில் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களின் வாழ்க்கையில் இதுதான் திருப்புமுனையாக அமைந்தது.
தனது தெய்வீக குரலால் செந்தில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த ஜோடிகள் தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் பல கச்சேரிகளை நடாத்தி வருவதோடு தமிழ்த் திரையுலகிலும் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைத்து அடுத்தடுத்து பல பாடல்களை பாடி வருகின்றனர். மேலும் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்களாம்.
திருமணம்
செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் 2012ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இவர்களின் திருமணப்புகைப்படங்களைப் பார்க்கும் போது இருவரும் சிறு வயது பிள்ளைகளைப் போல இருக்கிறார்கள் அப்போதிருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு இது இவர்களா அவர்கள் என இணையவாசிகள் அதிர்ச்சியாகியிருக்கின்றனர்.