மேடையில் கண்ணீர் விட்ட எஸ்.பி. பியின் மகன்! பாடகி சித்ரா வருகையின் பின்னர் நடந்தது என்ன? ஒட்டு மொத்த அரங்கமும் சோகத்தில்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகன் தந்தையை நினைத்து அழுத காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.
இந்த வாரம், தனது 40வது ஆண்டு பயணத்தை சூப்பர் சிங்கர் நிகழ்க்ச்சியில் கொண்டாட, பிரபல பின்னணி பாடகி, சித்ரா வருகை தந்துள்ளார்.
அப்போது, டாப் 7 போட்டியாளர்களின் ஒருவராக பரத்துடன் இணைந்து அவர், எஸ்.பி.பி பாடிய சூப்பர்ஹிட் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த பாடலை கேட்டு, பாடகர் எஸ்.பி. சரண் கண்கலங்கியுள்ளார்.
மேலும், தனது தந்தையை மிகவும் மிஸ் செய்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.