வாட்ஸ் அப் நமக்கு தரும் புதிய அப்டேட்! என்னான்னு தெரிஞ்சுக்கோங்க
தற்போது நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயனர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
ஒரு வீட்டில் மனைவி, கணவர், குழந்தைகள், தாத்தா, பாட்டி என எல்லோருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் அதற்குள் ஒரு வாட்ஸ் அப் இருக்கிறது.
இதனால் தகவல்களும் கண் இமைக்கும் நேரத்தில் மற்றவர்களுக்கு பரிமாற்றப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் நிறுவனமும் மக்களின் வசதிக்கு ஏற்ப நாளுக்கு நாள் தங்களது அப்டேட்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும் நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் நமக்கு என்ன தேவையோ அவற்றை தன்னுடைய செயலில் அப்பேட் என்ற ஒப்ஸன் மூலம் மாற்றிக் கொடுக்கிறது.
இதன்படி, வாட்ஸ் அப்பில் புதிய அப்பேட் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக தொடர்ந்து தெளிவாக பார்க்கலாம்.
1.தேவைக்கேற்ப மொழிகளை மாற்றிக் கொள்ளலாம்.
அதாவது பொதுவாக வாட்சப்பில் ஆங்கிலம் மொழி மாத்திரம் பயன்படுத்த முடியும். இதனால் மற்றைய மொழிகளில் வாட்ஸ் அப்பை பாவிக்க முயலும் பயனர்களுக்கு அசௌகரியமாக இருப்பதால் இந்த அப்பேட் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்புக்கு சென்று மேலே உள்ள மூன்று புள்ளி > click the Settigs > App language > select the your language
2. வாட்ஸ் அப் Call Shortcut
தினமும் வாட்ஸ் அப்பிற்கு சென்று நீங்கள் தினமும் பேசும் நபருக்கு call செய்ய வேண்டும். ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய அப்டேட்டில் அதனை shortcut create செய்து home page-யில் வைத்து கொள்ளலாம். அதாவது short cut-யை கிளிக் செய்தால் ஈஸியா call பண்ணி கொள்ளலாம். இந்த அப்டேட் தற்போது செயல்முறையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் அனுப்புவதற்கான Limit அதிகரித்துள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப்பிலிருந்து ஒருவருக்கு புகைப்படங்கள் அனுப்பும் போது சுமாராக 30 புகைப்படங்கள் தான் ஒரே நேரத்தில் அனுப்பலாம். ஆனால் இப்பொது ஒருவருக்கு 100 போட்டோ வரைக்கும் SEND செய்யலாம்.