சூப்பர் சிங்கர் பூஜாவுக்கு இப்படியொரு சகோதரர் இருக்கிறாரா? நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு
மாற்றுதிறனாளியான சகோதரருடன் சூப்பர் சிங்கர் பூஜா பாடல் பாடி மகிழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் சிங்கர்
தற்போது இந்தியாவை பொருத்தமட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் பார்த்தால் பல சேனல்கள் இயங்கி வருகின்றன.
இந்த சேனல்களை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விஜய் டிவி தான் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இதில் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் பட்டிதொட்டியெங்கும் இருக்கும் மக்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது Super Singer Junior 10 சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.
வெள்ளை சேலையில் பூஜா
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் 9 ல் நிகழ்ச்சியில் பிரபலமானவர் தான் பூஜா.
இவர், பாடகி மட்டுமல்ல மாடலிங் துறையிலும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அப்படி எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளியை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.
அந்த வகையில், மாற்றுதிறனாளியாக இருக்கும் தன்னுடைய சகோதரர் உடன் அமர்ந்து “முன்பே வா..” பாடலை பாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகவுள்ள இந்த காணொளிக்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அத்துடன் உங்களுக்கு இப்படியொரு சகோதரர் இருக்கிறாரா? என்றும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இளைஞரின் தனித்திறமை இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |