மகளுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. தங்க நிற சேலையில் ஜொலிக்கும் குஷ்பூ
54 வயதிலும் தங்க நிற சேலையில் ஜொலிக்கும் குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ.
இவர் கடந்த 1980 ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
இதனை தொடர்ந்து 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகி வலம் வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.
இதனிடையே திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த அந்த புகைப்படம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், சினிமா , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பூ தங்க நிற சேலையில் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த படத்தில் பார்க்கும் பொழுது நடிகை குஷ்பூவிற்கு 54 வயது ஆனது போன்று தெரியவில்லை. இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் ஜொலிக்கிறார்.
இந்த புகைப்படங்களை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அத்துடன் நடிகை குஷ்பூ புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அதன் ப்ரோமோக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |