Super Singer: உங்களுக்கு வெட்கமா இல்லையா? காஞ்சனா வேடத்தில் மிரட்டிய சிறுமி
“பாத்ரூமுக்கு அம்மாவோட போறீங்க, உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என ராகவா லாரன்ஸை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுமியொருவர் கேட்டது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
Super Singer நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சனா வேடத்தில் மிரட்டிய சிறுமி
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், காஞ்சனா படத்தில் வரும் சரத்குமார் கெட்டப்பில் சிறுமியொருவர் பாடியது ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அத்துடன் மேடையில், “பாத்ரூமுக்கு அம்மாவோட போறீங்க, உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என படத்தில் வரும் காட்சி குறித்து சிறுமி, கேட்டதும் ராகவா லாரன்ஸும் அதற்கு ஏற்றால் போல் பதிலளித்துள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |