ஊடகங்களுக்கு நடிகை சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை!
தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நடிகை சாய் பல்லவி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை சாய்பல்லவி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி வருபவர் தான் நடிகை சாய்பல்லவி.
இவர், தற்போது “ராமாயணா” என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இதற்காக அசைவ உணவுகளை தவிர்த்து வருவதாகவும், தன்னுடன் எப்போதுமே உதவியாளர்களை வைத்துக் கொண்டு சைவ உணவுகளை மட்டுமே சமைத்து சாப்பிட்டு வருகிறாராம்.
இந்த செய்தி அறிந்த சாய்பல்லவி, “பெரும்பாலான சமயங்களில், கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும், அடிப்படையற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடன் பரப்பும் பொழுது நான் அமைதியாகவே இருக்கிறேன்.
ஆனால் இது நிற்காமல் தொடர்ந்தால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரமாக பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக எனது படங்களின் வெளியீடுகள், அறிவிப்புகள், எனது கேரியரின் முக்கியமான தருணங்களின் போது புகழ்பெற்ற ஊடகமோ, தனிநபரோ, செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதைகளை கூறினால் அதன் பின்னர் என்னுடன் சட்டப்படி சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.” எனக் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதற்கு முன்னர் இருந்த வதந்திகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டு வருகின்றது.
சாய் பல்லவியின் இந்த நடவடிக்கைகளுக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |