பாக்கியலட்சுமியை ஓரங்கட்டி நம்பர் 1 சீரியலாக மாறிய எதிர்நீச்சல்: கரிகாலன் தான் காரணமா?
டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் 1 சீரியலாக மாறியிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல் இதற்கு காரணம் இந்தவொரு விடயம் தான்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்
இதுநாள் வரைக்கும் டாப்பில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு டிஆர்பி ரேட்டிங்கில் 11.16 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தட்டி தூக்கியிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல்.
இந்த சீரியல் முதலிடத்திக்கு வந்ததற்கு ஆதிரை -கரிகாலன் திருமணம் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் கடைசி நிமிடம் வரைக்கும் ஆதிரை திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்று ஒரு பரபரப்பில் இருந்த மக்களுக்கு கரிகாலன் தாளி கட்டியதும் ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும் இந்த சீரியலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
மேலும், 2ஆவது இடத்தில் கயல் தொடரும் மூன்றாவது இடத்தில் சுந்தரி சீரியலும் இடம்பெற்றிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |