சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 13 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இணைவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக நிலைகளானது 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகன்றது.
அந்தவகையில், கிரகங்களின் அரசனாக திகழும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியும், 13 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சூரியன் மார்ச் 18 ஆம் திகதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் வெற்றிகள் குவியப்போகின்றது.
அப்படி சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் சூரிய பகவான் பிரவேசிப்பதால், அதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போதும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியினருக்கு சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான வெற்றிகள் குவியப்போகின்றது.
நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு பிறக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளிவருவதற்கான வாய்ப்பு அமையும்.
புதிய வியாபார முயற்சிகள் வெற்றியளிக்கும். சூரியனின் ஆசியால் உயர் பதவியில் அமர்வதற்கான யோகம் காணப்படுகின்றது.
மகரம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசியினருக்கு பொருளாதார ரீதியில் அமோகமான நன்மைகள் கிடைக்கும்.
புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தானாகவே தேடிவரும். பணியிடதில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.
குடும்பத்தில் மகிழச்சியான கூழல் நிலவும். குறிப்பான திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும்.
மீனம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசியினரின் தொழில் வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் சாதகமான பலன்கனை கொடுக்கப்போகின்றது.
இதுவரை காலமும் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் விலகி, மனதில் தெளிவு பிறக்கும். எதையும் சாதித்துவி்டலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.
தொழில் ரீதியில் புதிய திட்டங்கள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |