ஆர்த்தி ரவியை கடுப்பேற்றும் கெனிஷா... வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!
பாடகி கெனிஷா செம ட்ரெண்டிங்கான உடையில் படு ஹொட் லுக்கில் நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
கெனிஷா பிரான்சிஸ் - ரவி மோகன்
தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.

ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஆர்த்தி ரவியுடன் தான் வளர்கின்றார்கள்.

ஆர்த்தி ரவி- ரவி மோகன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தில் இருந்து சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது.
இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.

அதனால் ரவிமோன் மற்றும் கெனிஷா வெளியிடும் பதிவுகளுக்கு இணையத்தில் கடும் கண்டனம் மற்றும் தாறுமாறான விமர்சனங்கள் வலுத்து வருகின்றது.
இந்நிலையில், பாடகி கெனிஷா ட்ரெண்டிங் உடையில் நடனமாடிய காணொளியுடன், இறைவா என் பயத்தை போக்கி நம்பிக்கையை கொடு, நான் முக்கியமான விடயங்களுக்காக படைக்கப்ட்டிப்பதை உணரசெய் என்ற வகையில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளிக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், பலரும் கெனிஷாவை வெளிப்படையாகவே திட்டி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |