கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்- த்ரிஷா! வைரலாகும் ஆதாரங்கள்
சர்ச்சைகளுக்கு மத்தியில், எதைப்பற்றியும் சிந்திக்காமல் விஜய் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் சென்ற விடயம் தான் அண்மைகாலமாக இணையத்தில் புயலை கிளப்பி வருகின்றது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கும் கூட இவர்கள் விஜய்- த்ரிஷா ஒன்றாக சென்றமைக்கான ஆதரங்கள் வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

விஜய் விவாகரத்து சர்ச்சை
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒரே காரில் சென்றிருந்தார்.
குறித்த விடயம் இணையத்தையே போர்களமாக மாற்றியது என்றால் மிகையாகாது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் பெரும் ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றார்கள்.

எந்தத் தளபதிக்காகச் சண்டை போட்டோமோ, அவரே இப்படிச் செய்துவிட்டாரே! என விஜய் ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
சங்கீதா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களிலேயே திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வலம் வந்துள்ளது 'வெட்கக்கேடானது' "ஆறுதலுக்குக் கூட மனைவி பக்கம் நிற்காமல், இப்படிப் பகிரங்கமாகத் திரிஷாவுடன் ஒரே நிற உடையில் வலம் வருவது நாங்கள் நேசித்த விஜய்க்கு அழகல்ல" என்றும், "குடும்பத்தையும் இழந்து, இப்போது நற்பெயரையும் விஜய் இழந்து வருகிறார்" என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்
இந்நிலையில், விவாகரத்து சர்ச்சை கிளம்பும் முன்னர் நடந்த பல விடயங்கள் குறித்து ரசிகர்கள் தேடிவருகின்றார்கள்.
அந்தவகையில், கோவாவில் நடைப்பெற்ற கீர்த்தி-ஆண்டனி தட்டில் திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அருகருகில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் வெளியாகி இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12, 2024 அன்று கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay & Trisha Went to Keerthy Suresh marriage to Goa in Same Flight in the Nearby Seats 😱🤔❤#KeerthySuresh#ThalapathyVijay #trisha #cinemakaaran360 #vjlinga@trishtrashers @actorvijay#KeerthySureshMarriage pic.twitter.com/ePIB9OUsWK
— CINEMAKAARAN 360° OFFICIAL (@CINEMAKAARAN360) December 12, 2024
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |