சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட்
சுக்கிர பெயர்ச்சியினால் நன்மைகளை பெரும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இதில் சுக்கிரன் மகிழ்ச்சியின் காரணி கிரகமாக கருதப்படுவதுடன், செல்வ செழிப்பிற்கு அதிபதியாகவும் இருக்கின்றார்.
வசீகரம், பணம், பொருள், பேச்சாற்றல், அழகு, குடும்ப வாழ்க்கை, காதல், அன்பு, ஈர்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரணியாக இந்த கிரகம் உள்ளது.
ஒருவரது ஜாகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றியினை சந்திப்பார்கள்.
தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிரன் ஜுன் 8ம் தேதி கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகின்றார். இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
குருவும் கடக ராசியில் பெயர்ச்சி அடைந்த நிலையில், இரட்டிப்பான நன்மையினை சில ராசியினர் பெறுகின்றனர்.

மேஷம்
சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு நிதி ஆதாயத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படுவதுடன், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களது கைக்கு கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், கடன் பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகள், பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
உங்களது வங்கி சேமிப்பு வளரத் தொடங்குவதுடன், வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதியும் காணப்படும்.

சிம்மம்
சிம்ம ராசியினர் சுக்கிரன் பெயர்ச்சியினால் மங்களகரமானதாக இருப்பதுடன், சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் உயர்கின்றது. புதிய முயற்சியினைத் தொடங்க திட்டமிடும் காலமாக இவை இருக்கும்.
மிகப்பெரிய வணிக ஒப்பந்தத்தினை பெறுவீர்கள். வருமானத்தில் உயர்வும் காணப்படும். அதே போன்று பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பழைய முதலீடுகள் தற்போது மிகப்பெரிய லாபத்தினை அளிக்கின்றது.

தனுசு
தனுசு ராசியினர் சுக்கிரன் பெயர்ச்சியினால் பொருளாதார நிலை வலுப்பெறுவதுடன், திடீர் நிதி ஆதாயங்களுக்கான வழிகளையும் கொடுக்கும்.
பூர்வீகச் சொத்துக்கள் மூலமாக நீங்கள் நன்மையினை பெறுவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். முடங்கியிருந்த பணம் தற்போது கை சேரும்.

மன அழுத்தம் மற்றும் கவலைகள் அனைத்தும் நீங்குவதுடன், இந்தக் காலக்கட்டத்தில் புதிய வாகனம் மற்றும் புதிய வீடு வாங்கும் யோகமும் கிடைக்கும்.
சுக்கிரன் அருள் பெற, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |