பணத்தை சேமிக்க சாணக்கியர் சொல்லும் 4 விதிகள்! அடுத்த அம்பானி நீங்க தான்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தைச் சேமிப்பது என்பது அதைச் சம்பாதிப்பதை மட்டும் சார்ந்தது அல்ல, இதில் இன்னும் குறிப்பிட்ட சில விடயங்கள் உள்ளது.

சாணக்கியர்
இப்போதெல்லாம், மக்கள் மற்றவர்களைக் கவரத் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்கிறார்கள். விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பகட்டான வாழ்க்கை முறை போன்வற்றை தான் பின்பற்றுகிறார்கள்.
இருப்பினும், சாணக்கிய நீதி இதற்கு மாறாகக் கூறுகிறார். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் புத்திசாலித்தனமாகச் செலவு செய்யக் கற்றுக்கொண்டால் மட்டுமே செல்வம் நிலைத்திருக்கும்.
சில துறைகளில் அதிகப்படியான செலவு செய்வது நிதிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் எனவே பணத்தை சேமிக்க கடைபிடிக்கவேண்டிய விடயங்கை சாணக்கியர் கூறுகிறார்.

நான்கு விதிகள்
சமூகத்தின் மீதான பயம்
- சமூகத்தில் உள்ளோருக்காக திருமணங்கள் மற்றும் பிற விழாக்களுக்காகப் பணம் கடன் வாங்குவது, நீண்ட காலப் போக்கில் ஒரு நிதிச் சுமையாக மாறக்கூடும். சாணக்கியரின் கூற்றுப்படி, சமூகத்திற்கு பயந்து நாம் வாழப்பழகாமல் நமது திறமைக்கு முக்கியதுவம் கொடுக்க வுணே்டும் என்று அவர் கூறுகிறார்.
மலிவான புகழ்
- மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகப் பணம் செலவழிப்பது அவசியமற்றது அது யாராக இருந்தாலும் சரி. சாணக்கிய நீதியின்படி உண்மையான அங்கீகாரம் என்பது பகட்டு மற்றும் செலவினங்களால் அல்ல, கடின உழைப்பு மற்றும் நடத்தை மூலமே கட்டமைக்கப்படுகிறது.
ஆடம்பரத்தைத் தவிர்க்கவும்
- சாணக்கிய நீதியின்படி, மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல. பலர் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்டிக்கொள்வதற்காக, தங்களின் வருமானத்திற்கு மீறி செலவு செய்கிறார்கள். அத்தகைய கௌரவம் நீண்ட காலம் நீடிக்காது. மக்கள் உங்களை வெளிப்படையாகப் பாராட்டலாம், ஆனால் அதனால் உண்மையில் எந்தப் பயனும் இல்லை. எனவே, ஆடம்பரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உறவுகளுக்காகச் செலவிடுவதைத் தவிர்க்கவும்
- சிலர் லாபத்திற்காக மட்டுமே உறவுகளைப் பேணுகிறார்கள். அத்தகைய நபர்களுக்காகப் பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது தீங்கு. சுயநல நண்பர்கள் கடினமான காலங்களில் உங்களைக் கைவிட்டுவிடுவார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எனவே, உங்களை அவமதிப்பவர்கள் அல்லது உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களுக்காகச் செலவிடுவதைத் தவிர்க்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |